Followers

Saturday, October 4, 2014

பசிவந்தால் பத்தும் பறந்து போகும். அந்த பத்தும் எவை தெரியுமா?




     தமிழ் உலகின் தலைசிறந்த மூதாட்டி, நம் ஒளவைப்பாட்டி. தமிழை மட்டுமல்ல, தமிழால் பலரையும் வாழ வைத்தவர். தமிழிலேயே அறிவியல் புலமையை அள்ளித் தெளிதவர். அறிவியல் முறையில் ஆய்ந்து தெளிந்து தெரிவித்த செய்திதான் இந்த பத்து குணங்களும்....!


மூதுரை

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்.
-   ஔவையார்.


1) மானம்

2) குடிபிறப்பு

3) கல்வி

4) ஈகை

5) அறிவுடைமை

6) தானம்

7) தவம்

8) உயர்வு (பதவி)

9) தொழில் முயற்சி

10) காமம்

பசி வந்தால் இந்த பத்தும்தான் பறந்து போகும். அதனால்தான் பாரதியார் தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாரோ...?!


1 comment:

  1. திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தளம் மூலமாக தங்களது தளம் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete