Followers

Tuesday, May 31, 2011

காத்து... கருப்பு....



           மக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில்  வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள். 
ஆதி காலத்தில் தளிர் விட்ட இந்த பயம் தற்போது அகற்ற முடியாத விருட்சகமாக வளர்ந்து நிற்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்தியவை காற்றும் இருட்டும்தான். சுழன்றடிக்கும் காற்றையும் கண்களை மறைக்கும் இருட்டையும் எதோ தீய சக்திகள் என்று எண்ணினான். பூமி உழப்படாத கன்னி நிலமாக இருந்த அந்த காலகட்டத்தில் சூறாவளிகள் சுழன்றடிக்கும் பொது அவை பூமியைக் குழிப் பறிக்கும். அப்போது மன்னுக்குள் புதையுண்டிருந்த பாஸ்பரஸ் வெளிப்பட்டு காற்றில் கலந்து தீப்பற்றி எரியும். சூறாவளியோடு சேர்ந்து எரிகிற அந்த நெருப்பைப் பார்த்த ஆதி மக்கள் “கொள்ளிவாய் பிசாசு என்று பயந்து ஓடினர். இந்த கொள்ளிவாய் பிசாசுகள் அக்காலத்தில் சூறாவளி வீசும் பொது பூமி எங்கும் எழுந்து பீதியூட்டியது. இந்த கொள்ளிவாய் பிசாசுகளை சரிகட்ட பலிகள் தரப்பட்டன. ஆதி மக்களை மிகவும் மிரட்டியவை காத்து, கருப்பு இரண்டும்தான்.

           காத்து என்றால் காற்று. கருப்பு என்றால் இருட்டு ( இருள் ). குகைகளிலும் மரப்பொந்துகளிலும், அடர்ந்த மரங்களுக்கிடையேயும் மக்கள் வாழ்ந்தனர். பலமாக வீசும் காற்றினால் மரங்கள் ஒடிந்து விழுந்து அழிக்கும். புயல் வீசினால் தாங்கமுடியாத பேரழிவு ஏற்பட்டு அல்லற்பட்டனர். எனவே காற்றுக் கடவுளை வணங்கினர்.

           இரவு காலங்களில் இருட்டு(கருப்பு) மிரட்டியது. எதையாவது பார்த்து பயந்து நரம்புக் கோளாறுகளால் (ஹிஸ்டீரியா) பிடிக்கப்பட்டனர். பயந்து திடீர் அதிர்ச்சியில் மரணமடைந்து விடுவதும் உண்டு. அவன் பேய் அடித்து செத்தான் என்பர்.

           இவ்வாறு மக்களுக்கு அதீத பயத்தை ஏற்படுத்திய அந்த கோரக் கடவுள்களின் பெயரை தங்கள் வாரிசுகளுக்குச் சூட்டினால் அக்கடவுளால் ஆபத்து நேராது என்று கருதினர். காற்றுக் கடவுளைத் திருப்திப் படுத்த காத்தாயி, காத்தப்பன், காத்தவராயன், காத்த வீரி என்றும் இருள் ( கருப்பு ) கடவுளைத் திருப்திப் படுத்த கருப்பன், கருப்பாயி, கருப்புச்சாமி, இருளன், இருளாயி என்று தங்கள் வாரிசுகளுக்குப் பெயர் சூட்டினர். இன்று வரை அது மரபாகத் தொடர்கிறது.   

No comments:

Post a Comment